டிஎன்பிஎல்: வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்...திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் இன்று மோதல்...!


டிஎன்பிஎல்: வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்...திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் இன்று மோதல்...!
x

Image Courtesy: @TNPremierLeague

டிஎன்பிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

திண்டுக்கல்,

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும்.

இந்நிலையில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல்; டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது.

இதையடுத்து இரவு 7.15 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் பால்சி திருச்சி மற்றும் லைகா கோவை அணிகள் மோதுகின்றன.


Next Story