டி.என்.பி.எல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று மோதல்


டி.என்.பி.எல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy: @TNPremierLeague

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோத உள்ளன.

சேலம்,

8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரில் இதுவரை 7 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் சேலத்தில் இன்று நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், விஜய் சங்கர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோத உள்ளன.

இதுவரை 2 லீக் ஆட்டங்களில் (கோவை மற்றும் நெல்லைக்கு எதிராக) ஆடியுள்ள சேப்பாக் அணி அந்த இரண்டிலும் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேவேளையில், ஒரு ஆட்டத்தில் (கோவைக்கு எதிராக) ஆடியுள்ள திருப்பூர் அணி அந்த ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இரு அணிகளும் தங்களது முதல் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.


Next Story