டிஎன்பிஎல்: கோவை கிங்ஸ்க்கு எதிராக டாஸ் வென்ற நெல்லை பந்துவீச்சு தேர்வு...!


டிஎன்பிஎல்: கோவை கிங்ஸ்க்கு எதிராக டாஸ் வென்ற நெல்லை பந்துவீச்சு தேர்வு...!
x

Image Courtesy: @TNPremierLeague

இன்று நடைபெறும் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

கோவை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கோவையில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Next Story