டிஎன்பிஎல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் பேட்டிங் தேர்வு


டிஎன்பிஎல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் பேட்டிங் தேர்வு
x

image courtesy: TNPL twitter

இன்று நடைபெறும் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

கோவை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கோவையில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story