டி20 உலகக்கோப்பை தொடரில் அசத்திய டாப் 5 பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் விவரம்


டி20 உலகக்கோப்பை தொடரில் அசத்திய டாப் 5 பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் விவரம்
x

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது.

பார்படாஸ்,

கடந்த 1-ம் தேதி தொடங்கிய 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஏறக்குறைய ஒரு மாத காலம் ரசிகர்களை மகிழ்வித்து வந்த இந்த தொடரில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் அரங்கேறின.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறின. மறுபுறம் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முதன்முறையாக தகுதிபெற்ற அமெரிக்கா சூப்பர் 8 சுற்றிற்கும், ஆப்கானிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கும் தகுதிபெற்று அசத்தின.

இந்நிலையில் இந்த தொடரில் அசத்தி அதிக விக்கெட்டுகள் மற்றும் அதிக ரன்கள் அடித்த டாப் 5 பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் விவரம் பின்வருமாறு:-

டாப் 5 பேட்ஸ்மேன்கள்

1. குர்பாஸ் - 281 ரன்கள்

2. ரோகித் சர்மா - 257 ரன்கள்

3. டிராவிஸ் ஹெட் - 255 ரன்கள்

4. டி காக் - 243 ரன்கள்

5. இப்ராஹிம் சத்ரான் - 231 ரன்கள்

டாப் 5 பந்து வீச்சாளர்கள்

1. பசல்ஹாக் பரூக்கி - 17 விக்கெட்டுகள்

2. அர்ஷ்தீப் சிங் - 17 விக்கெட்டுகள்

3. பும்ரா -15 விக்கெட்டுகள்

4. நோர்ஜே - 15 விக்கெட்டுகள்

5.ரஷீத் கான் - 14 விக்கெட்டுகள்

1 More update

Next Story