இணையத்தில் டிரெண்டாகும் எம்.எஸ். தோனியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..ரசிகர்கள் ஆரவாரம்


இணையத்தில் டிரெண்டாகும் எம்.எஸ். தோனியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..ரசிகர்கள் ஆரவாரம்
x

image courtesy: instagram/aalimhakim

எம்.எஸ். தோனி, ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்னதாக எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

சென்னை,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்குகிறது. நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன.

இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ். தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் அது குறித்து அவர் இன்னும் எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் எம்.எஸ். தோனி ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்னதாக எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. கருப்பு கலர் டீ-ஷர்ட் அணிந்த படி, நீண்ட தலை முடியுடன், கூலர்ஸ் அணிந்த படி அவர் இருக்கும் புகைப்படத்தை பிரபல அழகு கலை நிபுணரான ஆலிம் ஹக்கிம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் 'தோனி கம்பேக்' என்று ஆரவாரம் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story