19 வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு 69 ரன் இலக்கு...!


19 வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு 69 ரன் இலக்கு...!
x

19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

ஜொகனர்ஸ்பெர்க்,

19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா - இங்கிலாந்து மோதுகின்றன.

இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியில் 17.1 ஓவரில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, 69 ரன்கள் எடுத்தால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் டி20 சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற முனைப்புடன் இந்தியா களமிறங்கி விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியா 2 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 16 ரன் எடுத்துள்ளது. வெற்றிபெற இன்னும் 53 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்தியா விளையாடி வருகிறது.


Next Story