உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை தோற்கடிப்பது மிகவும் கடினம் - பாண்டிங் கருத்து


உலகக்கோப்பை தொடரில்  இந்தியாவை தோற்கடிப்பது மிகவும் கடினம் - பாண்டிங் கருத்து
x
தினத்தந்தி 17 Oct 2023 2:55 PM IST (Updated: 17 Oct 2023 5:51 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து துறைகளையும் வலுவான செயல்பாடுகளால் பூர்த்தி செய்து நல்ல துவக்கத்தை பெற்றுள்ள இந்தியாவை உலகக்கோப்பை தொடரில் தோற்கடிப்பது எதிரணிகளுக்கு மிகவும் கடினம் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

புது டெல்லி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் அனைத்து துறைகளையும் வலுவான செயல்பாடுகளால் பூர்த்தி செய்து நல்ல துவக்கத்தை பெற்றுள்ள இந்தியாவை இத்தொடரில் தோற்கடிப்பது எதிரணிகளுக்கு மிகவும் கடினம் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இருப்பினம் அதிகப்படியான அழுத்தம் கொண்ட நாக் அவுட் போட்டிகளில் இந்தியா வழக்கம் போல சொதப்பாமல் இருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "இத்தொடரின் ஆரம்பத்திலிருந்தே இந்தியாவை தோற்கடிப்பது எதிரணிகளுக்கு கடினமாக இருக்கும் என்று நான் சொல்லி வருகிறேன். ஏனெனில் அவர்களிடம் திறமையான அணி இருக்கிறது. மேலும் வேகப்பந்து வீச்சு, சுழல், டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் என அனைத்து துறைகளிலும் அவர்கள் பூர்த்தியடைந்துள்ளார்கள். அதன் காரணமாக அவர்களை தோற்கடிப்பது எதிரணிகளுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் அதிகப்படியான அழுத்தம் கொண்ட நாக் அவுட் போட்டிகளில் அவர்கள் எப்படி தங்களை தாங்கி நிறுத்துகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.


Next Story