ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தற்போதைய நிலை..!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தற்போதைய நிலை..!
x

Image Courtesy: ICC Twitter 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 262-ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 1 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஜடேஜா சுழலில் சிக்கி மள மளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 113 ரன்களில் ஆட்டமிழந்தது.

ஒரு ரன் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 115-ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எளிதான வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய இந்திய அணி 26.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து இந்திய அணி 6 விக்கெட்டுகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற தனது வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளது.

இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததை அடுத்து புதிய புள்ளி பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலிய அணி (66.67%) முதல் இடத்திலும், இந்தியா (64.06%) 2ம் இடத்திலும், இலங்கை (53.33%) 3ம் இடத்திலும் உள்ளன.எஞ்சியுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story