விராட் கோலியிடம் சில குறைகள் உள்ளது...கில் சச்சின் டெண்டுல்கரை போன்றவர் - இந்திய முன்னாள் வீரர்


விராட் கோலியிடம் சில குறைகள் உள்ளது...கில் சச்சின் டெண்டுல்கரை போன்றவர் - இந்திய முன்னாள் வீரர்
x

Image Courtesy: @BCCI

சுப்மன் கில்லை பொறுத்தவரையில் அவருடைய பேட்டிங் நுட்பம் டெண்டுல்கர் போல் இருக்கிறது.

மும்பை,

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தவறவிட்ட இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

இந்த இந்திய அணியில் விராட் கோலி, தற்போது சிறந்த பார்மில் உள்ள சுப்மன் கில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் பேட்டிங்கில் விராட் கோலிக்கு சிலக் குறைகள் உள்ளது என்றும் சுப்மன் கில் சச்சி டெண்டுல்கரை போன்றவர் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

சச்சின் டெண்டுல்கர் ஒரு முழுமையான பேட்ஸ்மேன் ஆக இருந்தார். சச்சினையும் விராட் கோலியையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் கோலிக்கு சில குறைகள் பேட்டிங்கில் இருந்தது. 2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஆண்டர்சனை எதிர்கொள்ள விராட் கோலி கடுமையாக திணறினார்.

ஆப் ஸ்டெம்பிற்கு வெளியே சென்ற பந்தை எதிர்கொள்ள விராட் கோலி சரியாக ஆட முடியவில்லை. விராட் கோலிக்கு அந்த தொடர் மிகவும் மோசமானதாக அமைந்தது.

ஆனால் சுப்மன் கில்லை பொறுத்தவரையில் அவருடைய பேட்டிங் நுட்பம் டெண்டுல்கர் போல் இருக்கிறது. சுப்மன் கில்லை ஆட்டமிழக்க வைப்பது என்பது மிகவும் கடுமையான விஷயமாக தற்போது தெரிகிறது. சுப்மன் கில்லிடம் எந்த குறையும் இருப்பது போல் தெரியவில்லை. ஏனென்றால் அவருக்கு கிரிக்கெட் யுக்தியும் மன பலமும் இருக்கிறது.

இவ்வாறு கைப் கூறினார்.


Next Story