அனுஷ்கா சர்மா என்னை சிறந்த நபராக மாற்றியதை ஒப்புக்கொள்வதில் வெட்கமில்லை -விராட் கோலி


அனுஷ்கா சர்மா என்னை சிறந்த நபராக மாற்றியதை ஒப்புக்கொள்வதில் வெட்கமில்லை -விராட் கோலி
x

அனுஷ்கா சர்மா என்னை சிறந்த நபராக மாற்றியதை ஒப்புக்கொள்வதில் வெட்கமில்லை என விராட் கோலி கூறி உள்ளார்.

மும்பை

விராட் கோலி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வின் போது,விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் அவர்களது மகள் வாமிகா கோலி பற்றி வெளிப்படையாக பேசினார்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் போது அவர்கள் ஒன்றாக அதிக நேரம் செலவிட்டது குறித்தும் அவர் பேசினார்.

அனுஷ்கா தன்னை எப்படி ஒரு சிறந்த நபராக மாற்றினார் என்பதை விராட் கோலி பகிர்ந்து கொண்டார், மேலும் அவர் கூறியதாவது:-

அனுஷ்கா எனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் அதை ஒப்புக்கொள்வதில் எனக்கு 'வெட்கமில்லை.

என்னைப் பொறுத்தவரை, என் வாழ்க்கைத் துணையைப் புகழ்வது கூட அது இல்லை, அவர் என்னை சிறந்த நபராக மாற்றியிருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வதில் எந்த வெட்கமும் இல்லை. அவர் என் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்ள், அதனால் கேட்டால், அது இயல்பாகவே வெளிப்படும்.

மனைவியும் வாமிகாவும் என்னுடன் இருக்கும் எந்த இடமும் எனக்கு வீடுதான். அவர்களுடன் இருக்கும் போது எல்லாம் எப்படி தானாகவே இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று கூறினார்.




Next Story