ஐபிஎல் இறுதிப்போட்டி: மழையால் டாஸ் தாமதம்... ஆட்டம் இன்று ரத்தானால் அடுத்து என்ன...?
அகமதாபாத்தில் கனமழை பெய்து வருகிறது.
அகமதாபாத்,
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
இதனிடையே, அகமதாபாத்தில் இன்று கனமழை பெய்து வருகிறது. இறுதிப்போட்டி நடைபெற உள்ள மைதானம் அமைந்துள்ள பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை பெய்து வரும் நிலையில் இறுதிப்போட்டி இன்று நடைபெறுவது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, 9.35 மணிக்கு முன்னதாக மழை நிற்கும் பட்சத்தில் போட்டி தொடங்கி முழு ஆட்டமும் 20 ஓவர்களும் வீசப்படும். அதேவேளை, இரவு 12.06 மணிக்கு முன்னதாக மழை நிற்கும்பட்சத்தில் போட்டி 5 ஓவர்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மழை இன்று முழுவதும் பெய்தால் ரிசர்வ் டே முறைப்படி ஆட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.