கோலியும் ராகுலும் பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்கவில்லை... ரோகித் சர்மா


கோலியும் ராகுலும் பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்கவில்லை... ரோகித் சர்மா
x
தினத்தந்தி 19 Nov 2023 6:19 PM GMT (Updated: 19 Nov 2023 6:25 PM GMT)

நாங்கள் இன்னும் 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என ரோகித் சர்மா பேசினார்.

அகமதாபாத்,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்த நிலையில், போட்டி முடிவடைந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

முடிவு நாங்கள் நினைத்த வழியில் இல்லாமல் போனது. இன்று எங்களுக்கு சிறந்ததாக இல்லை. நாங்கள் எல்லா வகையிலும் முயற்சி செய்தோம். ஆனால், அவை எங்களுக்கு உதவாமல் போய்விட்டது. 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால், அது சிறந்தாக இருந்திருக்கும்.

விராட் கோலி- கே.எல். ராகுல் ஜோடி நிலைத்து நின்று ஆடியபோது, நாங்கள் 270 முதல் 280 ரன்கள் வரை எதிர்பார்த்தோம். ஆனால், நாங்கள் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். 240 ரன்கள்தான் அடித்துள்ளபோது, எதிரணியின் விக்கெட்டை விரைவாக வீழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் டிராவிஸ் ஹெட், லபுஷேன் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து, வெற்றியை எங்களிடம் இருந்து முற்றிலுமாக பறித்துவிட்டனர்.

சேசிங் செய்தபோது, ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சற்று கூடுதல் சாதகமாக இருந்தது. நான் எந்தவித சாக்குபோக்கும் சொல்ல விரும்பவில்லை." இவ்வாறு ரோகித் சர்மா பேசினார்.


Next Story