இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு


இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு
x

image courtesy: BCCI twitter

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

டொமினிகா,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்த தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணியினர் வெற்றியோடு தொடங்கும் வேட்கையுடன் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.


Next Story