!-- afp header code starts here -->

இந்திய அணியில் பிடித்த பேட்ஸ்மேன் யார்..? எம்.எஸ்.தோனி வித்தியாசமான பதில்


இந்திய அணியில் பிடித்த பேட்ஸ்மேன் யார்..? எம்.எஸ்.தோனி வித்தியாசமான பதில்
x

image courtesy: AFP

எம்.எஸ்.தோனியிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய அணியில் பிடித்த பேட்ஸ்மேன் யார்? என்று கேள்வி எழுப்பினர்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்த தோனி சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார்.

மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர். அந்த வகையில் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.

இந்நிலையில் எம்.எஸ்.தோனியிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய அணியில் பிடித்த பேட்ஸ்மேன் யார்? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த எம்.எஸ். தோனி, " இந்திய அணியில் பிடித்த பேட்ஸ்மேனை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். ஏனெனில் நம்மிடம் நிறைய நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அதற்காக நம்மிடம் நல்ல பவுலர்கள் இல்லை என்று அர்த்தமில்லை. தற்போது நமது பேட்ஸ்மேன்களில் நான் பார்க்கும் ஒருவர் நன்றாக பேட்டிங் செய்வது போல் தெரிகிறது. ஆனால் மற்றொருவரை பார்க்கும்போது அவரும் அசத்துகிறார். எனவே இந்திய அணி நன்றாக செயல்படும் வரை நான் சிறந்த பேட்ஸ்மேனை தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. அவர்கள் தொடர்ந்து ரன்கள் அடிக்க விரும்புகிறேன். இருப்பினும் எனக்குப் பிடித்த பவுலரை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்" என்று கூறினார்.

1 More update

Next Story