ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த சாம் கர்ரன்


ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த சாம் கர்ரன்
x
தினத்தந்தி 4 Dec 2023 6:07 AM GMT (Updated: 4 Dec 2023 6:09 AM GMT)

இதற்கு முன்பு 2006ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஸ்டீவ் ஹார்மிசன் 10 ஓவர்களில் 97 ரன்கள் விட்டுக்கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி, ஆண்டிகுவாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 325 ரன்கள் குவித்தபோதும், பந்துவீச்சில் கோட்டைவிட்டதால் தோல்வியை சந்தித்தது.

இப்போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் சாம் கர்ரன் 9.5 ஓவர்கள் வீசி, 98 ரன்கள் விட்டுக்கொடுத்தார். குறிப்பாக கடைசி நேரத்தில் 45 மற்றும் 49வது ஓவர்களில் முறையே 15 மற்றும் 19 ரன்களை வாரி வழங்கினார். இது வெஸ்ட் இண்டீசின் வெற்றியை எளிதாக்கியது.

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை சாம் கர்ரன் படைத்துள்ளார்

இதற்கு முன்பு 2006ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஸ்டீவ் ஹார்மிசன் 10 ஓவர்களில் 97 ரன்கள் விட்டுக்கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது.

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் விவரம்:

சாம் குர்ரன் : 9.5 ஓவர்களில் 98 ரன்கள்

ஸ்டீவ் ஹார்மிசன் : 10 ஓவர்களில் 97 ரன்கள்

கிறிஸ் ஜோர்டான் : 9 ஓவர்களில் 97 ரன்கள்)

ஜேக் பால் : 10 ஓவர்களில் 94 ரன்கள்

ஜேம்ஸ் ஆண்டர்சன்: 10 ஓவர்களில் 91 ரன்கள்

ஜேம்ஸ் ஆண்டர்சன்: 9.5 ஓவரில் 91 ரன்கள்

லியாம் பிளங்கட் : 10 ஓவர்களில் 91 ரன்கள்

கிறிஸ் வோக்ஸ் : 10 ஓவர்களில் 91 ரன்கள்.


Next Story