ஐபிஎல் ஏலத்தில் வில்லியம்சனை வாங்க குஜராத் அணி ஆர்வம் காட்டுமா?- ஹர்திக் பாண்டியா பதில்


ஐபிஎல் ஏலத்தில் வில்லியம்சனை வாங்க குஜராத் அணி ஆர்வம் காட்டுமா?- ஹர்திக் பாண்டியா பதில்
x

Image Courtesy: BCCI 

ஐதராபாத் அணி கேன் வில்லியம்சனை விடுவித்துள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெல்லிங்டன்,

இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். நியூசிலாந்து அணியை கேன் வில்லியம்சன் வழிநடத்துகிறார்.

முன்னதாக ஐபிஎல் மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது. அந்த வகையில் ஐதராபாத் அணி அதன் கேப்டனான கேன் வில்லியம்சனை விடுவித்துள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்தாண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் வில்லியம்சனை வாங்க குஜராத் டைட்டன்ஸ் ஆர்வம் காட்டுமா? என்ற கேள்விக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பதில் அளித்துள்ளார். முன்னதாக பாண்டியா இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அறிமுக அணியான குஜராத்தை வெற்றிகரமாக வழிநடத்தி சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார்.

இந்த நிலையில் வில்லியம்சனை குஜராத் அணி ஏலத்தில் வாங்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த பாண்டியா, " அதுபற்றி எனக்கு தெரியவில்லை. இப்போது நான் இந்தியாவுக்காக விளையாடுகிறேன். குஜராத் அணி வில்லியம்சனை வாங்குமா என்பது பற்றி சிந்திக்க இன்னும் அதிக நேரம் உள்ளது" என தெரிவித்தார்.


Next Story