5 அணிகள் பங்கேற்கும் பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்: அடுத்த ஆண்டு நடக்கிறது


5 அணிகள் பங்கேற்கும் பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்: அடுத்த ஆண்டு நடக்கிறது
x

கோப்புப்படம்

5 அணிகள் பங்கேற்கும் பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

முதலாவது பெண்கள் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கான அட்டவணை, திட்டமிடல் போன்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி இந்த போட்டியில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மற்றொரு அணி 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகளில் இருந்து தேர்வாகும். களம் காணும் ஆடும் லெவன் அணியில் 5 வெளிநாட்டு வீராங்கனைகளை அனுமதிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.


Related Tags :
Next Story