பெண்கள் பிரிமீயர் லீக்: ரூ.3.4 கோடிக்கு மந்தனாவை ஏலத்தில் எடுத்த பெங்களூரு..!


பெண்கள் பிரிமீயர் லீக்: ரூ.3.4 கோடிக்கு மந்தனாவை ஏலத்தில் எடுத்த பெங்களூரு..!
x

பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் முதலாவது பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது.

மும்பை,

பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் முதலாவது பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதையொட்டி ஆமதாபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய 5 நகரங்களை அடிப்படையாக கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டு விற்கப்பட்டு உள்ளன.

5 அணிகளுக்கும் சேர்த்து 30 வெளிநாட்டவர் உள்பட 90 வீராங்கனைகள் தேவைப்படுகிறார்கள். இவர்கள் ஏலம் மூலம் அணிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளனர். இதன்படி பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று நடைபெற்று வருகிறது.

ஏலப்பட்டியலில் 15 நாடுகளை சேர்ந்த மொத்தம் 448 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.269 பேர் இந்தியர். 179 வீராங்கனைகள் வெளிநாட்டவர். இவர்களில் 202 வீராங்கனைகள் சர்வதேச அனுபவம் பெற்றவர்கள்.

இந்த ஏலத்தில் முதலாவதாக இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வந்தார். இவரை ஏலத்தில் எடுக்க மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் கடுமையாக போட்டி போட்டன. இறுதியில் பெங்களூரு அணி ரூ. 3.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இரண்டாவதாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் ஏலத்தில் வந்தார். இவரை ரூ.1.80 கோடிக்கு மும்பை அண்ணி ஏலத்தில் எடுத்தது.

1 More update

Next Story