பெண்கள் பிரிமீயர் லீக் : 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி


பெண்கள் பிரிமீயர் லீக் : 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி
x

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.

மும்பை,

பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 4வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்ரு மோதின.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் மந்தனா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தனாவும், ஷோபி டிவைனும் களம் இறங்கினர். அதிரடியாக தொடங்கிய பெங்களூரு அணி, டிவைன் அவுட் ஆன பின்னர் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இதில் ஷோபி டிவைன் 16 ரன், மந்தனா 23 ரன், திஷா கசாட் 0 ரன். எலிஸ் பெர்ரி 13 ரன், ஹெதர் நைட் 0 ரன் என 71 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

இதையடுத்து ரிச்சா கோஷ் மற்றும் கனிகா அனுஜா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதிக் அனுஜா 22 ரன்னிலும், ரிச்சா ஹோஷ் 28 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். இதையடுத்து ஸ்ரேயங்கா பாட்டீல், மேகன் ஷட் ஆகியோர் இணைந்தனர். இவர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய ஸ்ரேயங்கா பாட்டில் 15 பந்தில் 23 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் ரிச்சா கோஷ் 28 ரன், ஸ்ரேயங்கா பாட்டில் மற்றும் மந்தனா ஆகியோர் தலா 23 ரன்னும் எடுத்தனர். மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட்டும், சைகா இஷாக், அமெலியா கெர் அகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் சார்பில் ஹெய்லி மேத்யூஸ் மற்றும் யாஸ்டிகா பாட்டியா ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக ரன்கள் குவிக்கத் தொடங்கிய இந்த ஜோடியில் யாஸ்டிகா பாட்டியா 23 (19) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஹேய்லி மேத்யூசுடன், ஸ்சிவர்-பூருண்ட் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. அதில் ஹேய்லி மேத்யூச் 26 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இந்த ஜோடியில் ஸ்சிவர்-பூருண்ட் 28 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

முடிவில் ஹேய்லி மேத்யூஸ் 77 (38) ரன்களும், ஸ்சிவர்-பூருண்ட் 55 (29) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் மும்பை அணி 14.2 ஒவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி, லீக் சுற்றின் தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.


Next Story