மகளிர் பிரீமியர் லீக்: ரூ. 4,670 கோடிக்கு ஏலம் போன அணிகள்...அகமதாபாத் அணியை வாங்கிய அதானி - முழு விவரம்..!


மகளிர் பிரீமியர் லீக்: ரூ. 4,670 கோடிக்கு ஏலம் போன அணிகள்...அகமதாபாத் அணியை வாங்கிய அதானி - முழு விவரம்..!
x
தினத்தந்தி 25 Jan 2023 4:51 PM IST (Updated: 25 Jan 2023 5:01 PM IST)
t-max-icont-min-icon

முதலாவது பெண்கள் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது.

புதுடெல்லி,

முதலாவது பெண்கள் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இதில் 5 அணிகள் உருவாக்கப்படுகிறது. பெண்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டிய 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பத்தை ரூ.5 லட்சம் செலுத்தி பெற்று சென்றன.

பெண்கள் ஐ.பி.எல் கிரிக்கெட் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு குறைந்தது ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் பெண்களுக்கான ஐபிஎல் அணிகளை வாங்க அனைத்து நிறுவங்களும் தங்களது ஏலத்தொகையை அதிகப்படியாக கேட்டிருந்தன. ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அதைவிட அதிகமாக அணிகள் ஏலம் விடப்பட்டுள்ளன.

5 ஐபிஎல் அணிகளையும் சேர்த்து பிசிசிஐக்கு ரூ. 4,669.99 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது 2008ம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் சாதனையை முறியடித்துள்ளது. இதற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், பெண்களுக்கான ஐபிஎல் லீக் மகளிர் பிரீமியர் லீக் என பெயரிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில்,

2008ம் ஆண்டு அறிமுகமான ஆண்கள் ஐபிஎல் அணிகளுக்கான ஏலத்தொகையை தற்போது அறிமுகமான மகளிர் பிரிமீயர் லீக்குக்கான அணிகளுக்கான ஏலத்தொகை முறியடித்துள்ளது. கிர்க்கெட்டில் இன்று ஒரு வரலாற்று நாள். மொத்த ஏலத்தில் ரூ. 4,699.99 கோடியை நாங்கள் பெற்றுள்ளதால் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

இது பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புரட்சியின் தொடக்கத்தை குறிக்கிறது. நமது மகளிர் கிரிக்கெட் வீராங்கனைளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த விளையாட்டு சகோதரத்துவத்திற்கும் ஒரு மாற்றமான பயணத்திற்கு வழி வகுக்கிறது. மகளிர் பிரீமியர் லீக் பெண்கள் கிரிக்கெட்டில் தேவையான சீர்த்திருத்தங்களை கொண்டு வரும்.

மேலும், பிசிசிஐ பெண்கள் கிரிக்கெட்டுக்கான இந்த தொடரை மகளிர் பிரீமியர் லீக் என பெயர் மாற்றம் செய்துள்ளது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

5 அணிகளையும் ஏலம் எடுத்த நிறுவங்கள் விவரங்களை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதன் விவரம்,

5 அணிகளையும் ஏலம் எடுத்த நிறுவங்கள் விவரம்:-

1. அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரைவேட் லிமிடெட் - ரூ. 1,289 கோடி - அகமதாபாத்

2. இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 912.99 கோடி - மும்பை

3. ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 901 கோடி - பெங்களூரு

4. ஜே.எஸ்.டபிள்யூ ஜிஎம்ஆர் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் - ரூ. 810 கோடி - டெல்லி

5. கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 757 கோடி - லக்னோ





Next Story