மகளிர் பிரீமியர் லீக் தொடர் : சுழற்சி முறையில் நடத்த பிசிசிஐ திட்டம் ?
முதல்முறையாக இந்த ஆண்டு பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தியது.
புதுடெல்லி,
இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆடவருக்கான ஐபிஎல் தொடர் 16 ஆண்டுகள் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. இதேபோன்று, மகளிருக்கான டி-20 போட்டியை முதல்முறையாக இந்த ஆண்டு பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தியது.
இதில் மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ,லக்னோ ஆகிய ஐந்து அணிகள் முதல் சீசனில் விளையாடியது. ஐபிஎல் போட்டிக்கு இணையாக நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் மும்பை அணி கோப்பையை வென்றது. இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரை அடுத்தாண்டு முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் சுழற்சி முறையில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
Related Tags :
Next Story