பெண்கள் பிரீமியர் லீக்; குஜராத் அணியின் முன்னணி வீராங்கனை விலகல் - காரணம் என்ன..?


பெண்கள் பிரீமியர் லீக்; குஜராத் அணியின் முன்னணி வீராங்கனை விலகல் - காரணம் என்ன..?
x

Image Courtesy: @Giant_Cricket

5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

இந்நிலையில் குஜராத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த அணியின் முன்னணி வீராங்கனையான ஹார்லீன் தியோல் இந்த சீசனுக்கான பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி உள்ளதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் எஞ்சிய தொடரில் இருந்து விலகி உள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story