பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பைக்கு 160 ரன் இலக்கு நிர்ணயித்தது உ.பி.வாரியர்ஸ்...!


பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பைக்கு 160 ரன் இலக்கு நிர்ணயித்தது உ.பி.வாரியர்ஸ்...!
x

Image Courtesy: @wplt20

தினத்தந்தி 12 March 2023 9:11 PM IST (Updated: 12 March 2023 11:02 PM IST)
t-max-icont-min-icon

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் பெண்கள் பிரிமீயர் லீக்கின் இன்று நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில் மும்பை-உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அலிசா ஹீலி, தேவிகா வைத்யா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இதில் வைத்யா 6 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய கிரண் நவ்கிரே 17 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து தஹ்லியா மெக்ராத், அலிசா ஹீலியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அபாரமாக ஆடி ரன்களை சேர்த்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அரைசதம் அடித்த நிலையில் அலிசா ஹீலி 58 ரன்னிலும், தஹ்லியா மெக்ராத் 50 ரன்னிலும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதையடுத்து சிம்ரன் ஷேக், சோபி எக்லெஸ்டோன் ஜோடி சேர்ந்தனர். இதில் சோபி எக்லெஸ்டோன் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆட உள்ளது.



Next Story