பெண்கள் டி20 உலகக்கோப்பை: இந்தியா-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதிப்பு...!


பெண்கள் டி20 உலகக்கோப்பை: இந்தியா-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதிப்பு...!
x

Image Courtesy: AFP 

தினத்தந்தி 20 Feb 2023 9:00 PM IST (Updated: 20 Feb 2023 9:57 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் டி20 உலக்கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

ஜோகனர்ஸ்பர்க்,

பெண்கள் டி20 உலக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மந்தனா மற்றும் ஷபாலி அபார ஆடினர். இதில் மந்தனா 87 ரன்னும் குவித்தனர். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எமி ஹண்டர் மற்றும் கேபி லீவிஸ் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் எமி ஹண்டர் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனார். இதையடுத்து களம் புகுந்த ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் ரேனுகா பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

இதையடுத்து அயர்லாந்து அணியின் கேப்டன் டெலனி, கேபி லீவிசுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அணியில் சரிவில் இருந்து மீட்டதோடு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த இணை 53 ரன்கள் சேர்த்தது. அயர்லாந்து அணி 8.2 ஓவர்களில் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறிக்கிட்டது. தற்போதைய சமயத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து வெற்றி பெற எடுக்க வேண்டிய ரன்னை விட 5 ரன் குறைவாக உள்ளது.

ஒருவேளை மழையால் இந்த ஆட்டம் கைவிடப்பட்டால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி பெறுவதோடு மட்டுமின்றி அரையிறுதிக்கு முன்னேறும்.


Next Story