உலகக்கோப்பை 2-வது அரையிறுதி: 212 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆல்அவுட்..!


உலகக்கோப்பை 2-வது அரையிறுதி: 212 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆல்அவுட்..!
x

image courtesy: Proteas Men twitter

தினத்தந்தி 16 Nov 2023 6:24 PM IST (Updated: 16 Nov 2023 7:03 PM IST)
t-max-icont-min-icon

213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.

கொல்கத்தா,

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய குயின்டன் டி காக் 3 ரன்னிலும் டெம்பா பவுமா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணி திணறியது. இந்த நிலையில், 14 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு தென் ஆப்பிரிக்கா 44 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மழை நின்றதும் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசன் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுபுறம் டேவிட் மில்லர் சிறப்பாக விளையாடி சதமடித்து 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்த நிலையில் 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தென் ஆப்பிரிக்கா 212 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.


Next Story