உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு..!

Image Courtesy: AFP
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
மும்பை,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள மிக முக்கியமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இரு அணிகளும் களம் இறங்குவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியின் அரையிறுதி வாய்ப்பு குறைந்து விடும் என்பதால் இரு அணியும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story