உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு..!


உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு..!
x

image courtesy; twitter/ @ICC

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

லக்னோ,

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இன்று நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, நெதர்லாந்தை சந்திக்கிறது.

ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது. வங்காளதேசம், இந்தியா, நியூசிலாந்து அணிகளிடம் தோல்வி கண்ட ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அந்த அணி அரைஇறுதிக்குள் முதல்முறையாக அடியெடுத்து வைக்க முடியும்.

ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசத்துக்கு எதிராக), 4 தோல்வியுடன் (பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளிடம்) அரைஇறுதி வாய்ப்பில் லேசாக ஒட்டிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸில் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச உள்ளது.Next Story