உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு..!

image courtesy; twitter/@ICC
உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
லக்னோ,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இரு அணிகளுமே இந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றிக்கணக்கை தொடங்கவில்லை. எனவே முதல் வெற்றியை பெற இரு அணிகளுமே கடுமையாக போராட உள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸில் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலி, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
இலங்கை: பாதும் நிசாங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, கருணாரத்னே, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, தில்ஷான் மதுஷங்க.