உலகக் கோப்பை இறுதிப்போட்டி: மைதானத்தில் விமான சாகசங்களை நிகழ்த்த திட்டம்


உலகக் கோப்பை இறுதிப்போட்டி:  மைதானத்தில் விமான சாகசங்களை நிகழ்த்த திட்டம்
x

இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

அகமதாபாத்,

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

இதில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் 19ஆம் தேதி இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு 10 நிமிடங்கள் விமான சாகசத்தில் ஈடுபடும் என்றும் இதற்கான ஒத்திகை இன்றும், நாளையும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் போது பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும் உலகக்கோப்பைகளை வென்றவர்களுமான கபில்தேவ், தோனி போன்றோரும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story