உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இதுவரை கோப்பையை வென்ற அனைத்து கேப்டன்களுக்கும் அழைப்பு


உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இதுவரை கோப்பையை வென்ற அனைத்து கேப்டன்களுக்கும் அழைப்பு
x

உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

ஆமதாபாத்,

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை சந்திக்காமல் 10 தொடர் வெற்றிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் 2 தோல்விகளை சந்தித்தாலும் பின்னர் எழுச்சிப்பெற்று வரிசையாக 8 வெற்றிகளை பதிவுசெய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் தங்களது முதல் ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்தன.சென்னையில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண பிரதமர் மோடி நேரில் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு உலகக் கோப்பையை வென்ற அனைத்து நாட்டு கிரிக்கெட் கேப்டன்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்திய அணியின் வெற்றி கேப்டன் மகேந்திரசிங் தோனி, ரிக்கி பாண்டிங், இயான் மோர்கன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.


Next Story