உலகக் கோப்பை தகுதிசுற்று; அமெரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி...!


உலகக் கோப்பை தகுதிசுற்று; அமெரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி...!
x

Image Courtesy: @ICC

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிசுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது.

புலவாயோ,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிசுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-3 இடங்களை பிடித்த ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், 'பி' பிரிவில் முதல் 3 இடங்களை பெற்ற இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் சூப்பர்சிக்ஸ் சுற்றுக்குள் நுழைந்தன.

ஒவ்வொரு குரூப்பிலும் கடைசி இரண்டு இடங்களை பிடித்த அயர்லாந்து, அமெரிக்கா, நேபாளம், யுஏஇ அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறவில்லை. அந்த அணிகள் 7 முதல் 10 இடங்களுக்கான போட்டியில் இறங்கின. இதில் 7வது இடத்துக்கான போட்டிக்கு முன்னேறும் அணியை தேர்வு செய்வதற்கான முதல் அரையிறுதி போட்டியில் அயர்லாந்து - அமெரிக்க அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி அயர்லாந்தின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 196 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அமெரிக்க அணி தரப்பில் சுஷாந்த் மோதானி, சைதேஜா முக்கமல்ல ஆகியோர் தலா 55 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அயர்லாந்து அணி 34.2 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 7வது இடத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது. அயர்லாந்து தரப்பில் பால் ஸ்டிர்லிங் அரைசதம் அடித்தார்.



Next Story