உலகக் கோப்பை தகுதிச்சுற்று; இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு...!


உலகக் கோப்பை தகுதிச்சுற்று; இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு...!
x

Image Courtesy: @ICC

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயின் புலவாயோ மற்றும் ஹராரே நகரங்களில் நடந்து வருகிறது.

புலவாயோ,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயின் புலவாயோ மற்றும் ஹராரே நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நேபாளம், நெதர்லாந்து, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளும், 'பி' பிரிவில் அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரக அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும்

அதன்படி குரூப் ஏ பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. குரூப் பி பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகள் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இலங்கை - அயர்லாந்து அணிகளும், ஸ்காட்லாந்து - ஓமன் ஆகிய அணிகள் மோத உள்ளன.

இதையடுத்து இலங்கை-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

மற்றொரு ஓமன் - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டாசில் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Next Story