உலகக்கோப்பை தொடர்; அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் இவை தான் - டி வில்லியர்ஸ் கணிப்பு


உலகக்கோப்பை தொடர்; அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் இவை தான் -  டி வில்லியர்ஸ் கணிப்பு
x
தினத்தந்தி 18 Aug 2023 9:57 AM GMT (Updated: 18 Aug 2023 10:53 AM GMT)

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

கேப்டவுன்,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இந்தச் சூழலில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கொண்டுள்ள நான்கு அணிகளை தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நிச்சயம் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும். இந்த முறை அவர்கள் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு கூட உள்ளது. உலகக் கோப்பை தொடரின் கதை மிகவும் விசித்திரமானது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

நான்காவது அணியாக தென் ஆப்பிரிக்கா இணைய வாய்ப்புள்ளது. பாகிஸ்தானும் முன்னேறலாம். ஆனால், நான் தென் ஆப்பிரிக்கா செல்லும் என நம்புகிறேன். திறமையான வீரர்கள் அணியில் உள்ளனர்.

நான் ஆசிய கண்டத்தை சாராத 3 அணிகளை தேர்வு செய்துள்ளேன். அது கொஞ்சம் கடினம் தான். இருந்தாலும் எனது முடிவில் நான் உறுதியாக உள்ளேன். ஏனென்றால் இந்தியாவில் ஆடுகளங்கள் அருமையானதாக இருக்கும் என்ற நம்பிக்கை தான்.

மோசமான விக்கெட்டை இந்த தொடரில் நாம் பார்க்க முடியாது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை செய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story