உலகக்கோப்பை: சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி அறிவிப்பு
இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகின்றன. அக்.5-ந்தேதி ஆமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் அக்டோபர் 8 ஆம் தேதி மோதுகிறது.
இந்த நிலையில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்குகிறது.
சென்னை , புனே , டெல்லி , ஆகிய இடங்களில் இந்திய அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்குகிறது.
தர்மசாலா, லக்னோ, மும்பை ஆகிய இடங்களில் இந்திய அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது.
பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் இந்திய அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது.
அகமதாபாத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்குகிறது.
அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி விற்கப்படும்என ஐசிசி அறிவித்துள்ளது.