உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ராகுலுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ...!


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ராகுலுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ...!
x

Twitter: BCCI

தினத்தந்தி 8 May 2023 5:44 PM IST (Updated: 8 May 2023 5:45 PM IST)
t-max-icont-min-icon

ஐபிஎல் போட்டியின் போது கே.எல்.ராகுலுக்கு தொடையில் காயம் ஏற்பட்டடது.

புதுடெல்லி,

2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளன.

இதில் இந்திய அணியை ரோகித் சர்மாவும், ஆஸ்திரேலிய அணியை பேட் கம்மின்ஸ்சும் வழிநடத்துகின்றனர். முதல் முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இந்திய அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் ஐபிஎல் போட்டியின் போது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ராகுல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்தும் விலகினார்.

இந்நிலையில் இந்திய அணியில் காயமடைந்த ராகுலுக்கு பதிலாக விக்கெட் கீப்பரும், அதிரடி ஆட்டக்காரருமான இஷன் கிஷன் இடம் பிடித்துள்ளார். மேலும், இந்திய அணியில் மாற்று வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.





Next Story