உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால் அல்லது கெய்க்வாட்...? - வெளியான புதிய தகவல்...!


உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால் அல்லது கெய்க்வாட்...? - வெளியான புதிய தகவல்...!
x

Image Courtesy: insta chennaiipl/rajasthanroyals

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால் அல்லது கெய்க்வாட் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிபட்டியலில் நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை டெல்லியில் சந்திக்க உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ஆடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்திலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுப்மன் கில் உடல்நிலை சீராக இன்னும் ஒருவார காலத்திற்கும் மேல் ஆகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக அவர் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக ஜெய்ஸ்வால் அல்லது கெய்க்வாட்டை சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் கோரிக்கைக்கு ஏற்ப சுப்மன் கில்லுக்கு பதிலாக மாற்று வீரரை சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story