உங்களுடைய சிறந்த ஆட்டம் இது என்பதை நம் மகள் ஒருநாள் புரிந்துகொள்வாள்.. விராட் கோலியை பாராட்டு மழையில் நனைத்த அனுஷ்கா சர்மா!


உங்களுடைய சிறந்த ஆட்டம் இது என்பதை நம் மகள் ஒருநாள் புரிந்துகொள்வாள்.. விராட் கோலியை பாராட்டு மழையில் நனைத்த அனுஷ்கா சர்மா!
x

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்த கோலியின் ஆட்டத்தை அனுஷ்கா சர்மா பாராட்டியுள்ளார்.

மெல்போர்ன்,

டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா கடைசி பந்தில் பரபரப்பான முறையில் 'திரில்' வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், 6.1 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது. அதன்பின்னர் பாண்டியா உடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.விராட் 53 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 82 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.விராட்டின் இந்த சிறந்த இன்னிங்ஸை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்த, விராட் கோலியின் ஆட்டத்தை விராட்டின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா பாராட்டியுள்ளார்.

"நீங்கள் அழகு! அசத்தும் அழகு!! இன்றிரவு மக்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளீர்கள்! இந்த போட்டி தனது வாழ்க்கையில் இதுவரை நடந்ததில் மிகச் சிறந்த போட்டி" என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, "இன்று தீபாவளிக்கு முன்னதாக, நீங்கள் மக்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நிரப்பினீர்கள். நீங்கள் ஒரு அற்புதமான மனிதர் என் அன்பே.

உங்களின் பொறுமையும், உறுதியும், நம்பிக்கையும் மனதை உலுக்குகிறது!! என் வாழ்க்கையின் சிறந்த போட்டியை இப்போதுதான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லலாம்.

அம்மா ஏன் தன் அறையில் நடனமாடுகிறாள், அலறினாள் என்று நம் மகளுக்குப் புரியவில்லை என்றாலும், அவளுடைய அப்பா அவருக்கு மிகவும் கடினமாக இருந்த ஒரு கட்டத்திற்குப் பிறகு, ஆனால் இதையெல்லாம் விட பலமாக திரும்பி வந்து, அன்றிரவு தனது சிறந்த இன்னிங்ஸை விளையாடினார் என்பதை அவளும் ஒரு நாள் புரிந்துகொள்வாள். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்."

இவ்வாறு பதிவிட்டு தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

போட்டிக்கு பின் வெற்றி குறித்து விராட் கோலியிடன் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விராட் கோலி, இந்த சூழ்நிலை கனவு போன்று உள்ளது. உண்மையை கூறவேண்டுமானால் என்னிடம் வார்த்தை இல்லை. வெற்றி எப்படி நிகழ்ந்தது குறித்து என்று எனக்கே தெரியவில்லை. இன்றைய ஆட்டம் தான் எனது சிறப்பு வாய்ந்த ஆட்டம் என நான் எண்ணிக்கொள்வேன்' என்றார்.

இந்த வெற்றியின் மூலம், கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.


Next Story