இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: தமிழக அணி 6-வது வெற்றி


இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: தமிழக அணி 6-வது வெற்றி
x

இளையோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 6-வது வெற்றி பெற்றது.

சென்னை,

25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான (இளையோர்) மாநில 'ஏ' கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 5 இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 'ஏ' பிரிவில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த பிரிவினருக்கான ஆட்டம் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி, நாகலாந்தை சந்தித்தது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த தமிழக அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 300 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேரில் பெராரியோ ஆட்டம் இழக்காமல் 107 ரன்னும் (109 பந்து, 7 பவுண்டரி), எஸ்.அரவிந்த் 103 ரன்னும் (109 பந்து, 11 பவுண்டரி) எடுத்தனர். பின்னர் ஆடிய நாகலாந்து அணி 44 ஓவர்களில் 114 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

இதனால் தமிழக அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 6-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். தமிழக அணி தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டும், கேப்டன் பிரதோஷ் ரஞ்சன்பால் 3 விக்கெட்டும், மோகன் பிரசாத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

1 More update

Next Story