இங்கிலாந்து அணியில் மீண்டும் ஜோப்ரா ஆர்ச்சர்...மும்பை இந்தியன்ஸ் அணியின் மகிழ்ச்சி பதிவு...!


இங்கிலாந்து அணியில் மீண்டும் ஜோப்ரா ஆர்ச்சர்...மும்பை இந்தியன்ஸ் அணியின் மகிழ்ச்சி பதிவு...!
x

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை,

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர். இவர் அந்த அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்ற போது அணியில் இடம் பெற்றிருந்தார். அதன் பின்னர் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார்.

அவரை 2022ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. ஆனால் அவர் காயம் காரணமாக 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரை ஆட வில்லை. அது மட்டுமில்லாமல் கடந்த இரு டி20 உலக கோப்பை தொடர்களையும் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஆர்ச்சர் அடுத்த ஆண்டு நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்ததை மும்மை இந்தியன்ஸ் அணி தனது டுவிட்டரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மும்பை அணி டுவிட்டர் பதிவில், மீண்டும் இங்கிலாந்து அணியில் ஜோப் என தங்களது மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளனர்.



1 More update

Next Story