இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் - இந்திய அணி பேட்டிங் தேர்வு


இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் - இந்திய அணி பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 14 July 2021 11:39 PM IST (Updated: 14 July 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.

செம்ஸ்ஃபோர்டு,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

அதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த டி-20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2-வது போட்டியில் இந்திய அணியும் பெற்றுள்ளன. இந்த நிலையில் வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது. இந்த ஆட்டம் இங்கிலாந்தின் செம்ஸ்ஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

Next Story