இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் 20 பேர் போட்டி


இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் 20 பேர் போட்டி
x

போட்டியில் இருந்து விலக விரும்புபவர்கள் நாளை பிற்பகல் 1 மணிக்குள் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் வருகிற 2-ந்தேதி டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. மனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் கடைசி நாளாகும். தலைவர், துணைத்தலைவர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு தலா 2 பேர், செயற்குழு கமிட்டி உறுப்பினர் பதவிக்கு 14 பேர் என மொத்தம் 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இவற்றை பரிசீலித்த தேர்தலை நடத்தும் அதிகாரி உமேஷ் சின்ஹா அனைத்து வேட்பு மனுக்களும் சரியான முறையில் உள்ளதாக நேற்று தெரிவித்தார். போட்டியில் இருந்து விலக விரும்புபவர்கள் நாளை பிற்பகல் 1 மணிக்குள் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இதில் தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர்கள் பாய்ச்சுங் பூட்டியா, கல்யாண் சவுபே இடையே நேரடி போட்டி நிலவுகிறது.


Next Story