உலக கால்பந்து தர வரிசை: இந்திய அணிக்கு 129–வது இடம்


உலக கால்பந்து தர வரிசை: இந்திய அணிக்கு 129–வது இடம்
x
தினத்தந்தி 12 Jan 2017 10:30 PM GMT (Updated: 12 Jan 2017 7:59 PM GMT)

உலக கால்பந்து அணிகளின் தர வரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

இதன்படி அர்ஜென்டினா, பிரேசில், ஜெர்மனி அணிகள் முறையே முதல் 3 இடங்களில் தொடருகின்றன. இந்திய அணி 6 இடங்கள் முன்னேறி 129–வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் இந்திய அணியின் சிறந்த தர வரிசை இதுவாகும். கடந்த ஆண்டில் இந்திய அணி, 11 சர்வதேச போட்டிகளில் விளையாடி 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றது.


Next Story