பனைக்குளத்தில் கோடைகால கால்பந்து விளையாட்டு போட்டிகள் வருகிற 28–ந்தேதி வரை நடக்கிறது


பனைக்குளத்தில் கோடைகால கால்பந்து விளையாட்டு போட்டிகள் வருகிற 28–ந்தேதி வரை நடக்கிறது
x
தினத்தந்தி 20 April 2017 10:19 PM GMT (Updated: 20 April 2017 10:18 PM GMT)

பனைக்குளத்தில் கோடைகால காந்பந்து விளையாட்டு போட்டிகள் தொடங்கி உள்ளன. இந்த விளையாட்டு போட்டிகள் வருகிற 28–ந்தேதி வரை நடக்கிறது.

பனைக்குளம்,

கால்பந்து போட்டிகள்

மண்டபம் ஒன்றியம் பனைக்குளத்தில் ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகால கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 29–வது கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் ஜும்மா பள்ளி பேஷ் இமாம் ஹாஜா முகைதீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து முஸ்லிம் பரிபாலன சபை நிர்வாகிகள், முஸ்லிம் நிர்வாக சபை நிர்வாகிகள், ஐக்கிய முஸ்லிம் சங்க நிர்வாகிகள், வாலிப முஸ்லிம் சங்க நிர்வாகிகள், பனைக்குளம் முன்னாள் கவுன்சிலர் வேலுச்சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்னுல் அஸ்லாம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம தலைவர்கள் போட்டியினை தொடங்கி வைத்தனர். வருகிற 28–ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளில் பனைக்குளம், அழகன்குளம், புதுவலசை, ஆற்றாங்கரை, மண்டபம், இளையான்குடி உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 அணிகள் கலந்து கொள்கின்றன.

பரிசு, கோப்பை

இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2–வது பரிசாக ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3–ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பையும், 4–ம் பரிசாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்படும்.

இதே போல சிறப்பாக விளையாடுபவர்களுக்கு ஆட்ட நாயகன் விருது, தொடர் ஆட்ட நாயகன் விருது போன்றவையும் வழங்கப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் இக்பால், செயலாளர் பலீல் முகமது, விளையாட்டு கேப்டன் கனி மற்றும் ஐக்கிய முஸ்லிம் சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர்.


Next Story