ஐ.எஸ்.எல். போட்டிக்கு ஆசிய கால்பந்து சம்மேளனம் அங்கீகாரம்


ஐ.எஸ்.எல். போட்டிக்கு ஆசிய கால்பந்து சம்மேளனம் அங்கீகாரம்
x
தினத்தந்தி 28 Jun 2017 9:45 PM GMT (Updated: 28 Jun 2017 9:24 PM GMT)

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித் தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது.

புதுடெல்லி,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித் தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. 3 ஆண்டுகள் போட்டி முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது தான் இந்த போட்டிக்கு ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்திய கால்பந்து சம்மேளனத்தின் பரிந்துரையை ஏற்று அங்கீகாரம் வழங்குவதாக ஆசிய சம்மேளனம் அறிவித்துள்ளது.

ஆசிய கால்பந்து சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கான தகுதி சுற்றுக்கு இதுவரை இந்தியா சார்பில் ஒரு அணி மட்டுமே அனுப்பப்பட்டு வந்தது. அதாவது ஐ-லீக் போட்டியில் வெற்றி பெறும் அணி அதில் விளையாடும். இனி அடுத்த ஐ.எஸ்.எல். போட்டியில் பட்டம் வெல்லும் அணியும் ஆசிய சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்றில் விளையாட இடம் பிடிக்கும். 

Next Story