கால்பந்து

இந்தியன் சூப்பர் லீக்: தொடக்க ஆட்டத்தில் மோகன் பகான் அணி வெற்றி + "||" + Mohan Bagan beat Kerala Blasters in opening match

இந்தியன் சூப்பர் லீக்: தொடக்க ஆட்டத்தில் மோகன் பகான் அணி வெற்றி

இந்தியன் சூப்பர் லீக்: தொடக்க ஆட்டத்தில் மோகன் பகான் அணி வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் 8-வது சீசன் கோவாவில் நேற்று தொடங்கியது.
கோவா,

11 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் 8-வது சீசன் கோவாவில் நேற்று தொடங்கியது. கொரோனா தொற்றின் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ரசிகர்கள் இல்லாமல் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. 

நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகான் அணி (மேற்கு வங்காளம்), கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மேற்கு வங்காளத்தின் மோகன் பகான் அணி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

இந்த ஆட்டத்தில் மோகன் பகான் அணி தரப்பில் ஹூகோ போமவுஸ் (2 மற்றும் 39-வது நிமிடம்), ராய் கிருஷ்ணா (27-வது நிமிடம்), லிஸ்டன் கோலாகோ (50-வது நிமிடம்) கோல் அடித்தனர். கேரள அணியில் சஹால் அப்துல் சமாத் (24-வது நிமிடம்), ஜார்ஜ் பெரேரா டயாஸ்(69-வது நிமிடம்) கோல் அடித்தனர். 

இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.