இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து : ஜாம்ஷெட்பூர்-ஏடிகே மோகன் பகான் அணிகள் இன்று மோதல்


இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து : ஜாம்ஷெட்பூர்-ஏடிகே மோகன் பகான் அணிகள்  இன்று மோதல்
x
தினத்தந்தி 6 Dec 2021 10:09 AM GMT (Updated: 6 Dec 2021 10:09 AM GMT)

ஜாம்ஷெட்பூர் அணி விளையாடிய 3 போட்டியில் 1 -ல் வெற்றி 2-ல் டிரா என்று புள்ளி பட்டியலில் 5- வது இடத்தில் உள்ளது.

கோவா ,  

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில்  ஜாம்ஷெட்பூர்    -  ஏடிகே மோகன் பகான்  அணிகள்  மோதுகின்றன.

ஜாம்ஷெட்பூர் அணி விளையாடிய 3 போட்டியில் 1 -ல் வெற்றி 2-ல் டிரா என்று  புள்ளி பட்டியலில் 5- வது  இடத்தில் உள்ளது. ஏடிகே மோகன் பகான் அணி தாங்கள்  விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் வெற்றி,1-ல் தோல்வி என்று புள்ளி பட்டியலில்  4-வது இடத்தில்  உள்ளது.  

Next Story