ஐ.எஸ்.எல் கால்பந்து :கோவா -கவுகாத்தி அணிகள் மோதிய ஆட்டம் 'டிரா'


ஐ.எஸ்.எல் கால்பந்து :கோவா -கவுகாத்தி  அணிகள் மோதிய   ஆட்டம் டிரா
x
தினத்தந்தி 14 Jan 2022 4:01 PM GMT (Updated: 15 Jan 2022 8:57 AM GMT)

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கவுகாத்தி (நார்த் ஈஸ்ட் யுனைடெட் ) - கோவா அணிகள் மோதின

கோவா 

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கவுகாத்தி (நார்த் ஈஸ்ட் யுனைடெட் ) - கோவா அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் 2-வது  நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ஹெர்னன் சண்டனா ஒரு கோல் அடித்தார் .இதனால் தொடக்கத்தில் அந்த அணி முன்னிலை  பெற்றது.இதற்கு பதிலடி கொடுக்க கோவா அணியின் கேப்ரேரா 39-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார் .இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.

தொடர்ந்து இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என 'டிரா' ஆனது.

Next Story