மெஸ்ஸியை புகழ்ந்த ரசிகர்.. கோபத்தில் சீறிய ரொனால்டோ


மெஸ்ஸியை புகழ்ந்த ரசிகர்.. கோபத்தில் சீறிய ரொனால்டோ
x

மெஸ்ஸிதான் சிறந்த கால்பந்து வீரர் என ரசிகர் கூறியதால் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ கோபம் அடைந்தார்.

துபாய்,

சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் அல்-நாசர் அணிக்காக ரொனால்டோ விளையாடி வருகிறார். இந்நிலையில், போட்டி முடிந்து அறைக்கு திரும்பிய ரொனால்டோவிடம், இளம் ரசிகர் ஒருவர் ரொனால்டோவைக் காட்டிலும் மெஸ்ஸிதான் சிறந்த வீரர் எனக் கூறினார்.

இதனால் கோபம் அடைந்த ரொனால்டோ, அந்த ரசிகரைக் கடிந்துகொண்டு வேகமாக வெளியேறினார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Next Story