ஆசிய கோப்பை கால்பந்து : இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி


ஆசிய கோப்பை கால்பந்து : இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
x

Image : Indian Football 

ஆட்டத்தின் 2வது பாதியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது.

கத்தார்,

ஆசிய கோப்பை கால்பந்தாட்ட தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

தொடக்கம் முதல் இரு அணிகளும் தீவிர தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்டத்தின் முதல் பாதி கோல் ஏதுமின்றி 0 - 0 என முடிந்தது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் ஜாக்சன் இர்வின் கோல் அடித்தார். இதனை தொடர்ந்து 73வது நிமிடத்தில் ஜோர்டன் போஸ் கோல் அடித்தார்.

இதனால் ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை பெற்றது. பதிலடி கொடுக்க கடுமையாக போராடியும் இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 2-0 என ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.


Next Story